திக்குவதற்கான காரணங்கள் என்ன.?
1-சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே அலைவரிசையில் இல்லாமல் இருப்பது. அதாவது சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே வேகத்தில் இல்லாமல் வெவ்வேறாக இருப்பது. திக்குவாய் இல்லாத நபர்களுக்கு சிந்தனையின் வேகமும் பேச்சின் வேகமும் ஒரே மாதிரி இருப்பதனால் அவர்கள் திக்குவதில்லை. 2.நம் ஆழ்மனதில் "நான் திக்கி பேசுவேன்" "எனக்கு பேச்சு திக்கும்" என்ற அனுபவ பதிவு இருப்பது. 3.பேசும்போது மூச்சுக் காற்றை பேசுவதற்கு ஏற்றவாறு பயன்படுத்த தெரியாமலும் பழகாமலும் இருப்பது. திக்குவாய் அல்லாத நபர்களுக்கு இது அன்னிச்சையாகவே சரியாக நடக்கும். 4.பேசும்போது உடல்மொழியை பயன்படுத்தாமல் இருப்பது. அதாவது கை கால் தலை பாேன்றவற்றை அசைத்து அசைத்து பேசாமல் இருப்பது. 5.சிறுவயதில் திக்குவாய் நபர்கள் பேசுவதை கவனித்திருப்பது. 6.பெற்றோர்கள் குழந்தைகள் முன் சண்டையிடுவது குழந்தைகளுக்கு பேச்சு தடுமாற்றத்தை ஏற்படுத்தும். பின்னாளில் இது திக்குவாயாக மாற வாய்ப்புள்ளது. 7.குழந்தைகளை பேச விரும்பிய இடங்களில் பேச விடாமல் தடுப்பதும், பேச விரும்பாத இடங்களில் பேசு பேசு என கட்டாயப்படுத்தும் திக்குவாய் ஏற்பட காரணமாக அமைகி...